தென் ஆப்பிரிக்கா – ஒரு வரலாற்று திருப்புமுனை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றெடுத்தது, வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. நீண்ட நாட்களாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒட்டிக்கொண்டிருந்த ‘சோக்கர்ஸ்’ என்ற அழைப்பை முற்றிலுமாக ஒதுக்கியது இந்த வெற்றி. இதற்குப் பின்னால் இருவரின் ஆற்றல் மிகுந்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கது – எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் தெம்பா பவுமா.
இந்த வெற்றி, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களுக்காகவும், அந்த நாட்டின் கிரிக்கெட் வரலாற்றிற்காகவும் ஒரு அடையாளக் கல்லாக மாறும். 1983 உலகக் கோப்பையை வென்று இந்திய கிரிக்கெட் எப்படி ஓர் புரட்சி பாதையில் நகர்ந்ததோ, அதுபோலவே தென் ஆப்பிரிக்காவும் இன அடக்குமுறைகளையும், கடந்த கால ஏமாற்றங்களையும் தாண்டி, இப்போது ஒரு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இது நிச்சயம் கருப்பரின இளைஞர்களுக்கான ஒரு புதிய உந்துதலாக அமையும்.
இந்த வெற்றியை, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டில் ஒரு புதிய தொடக்கமாகவே பார்க்கலாம். கேப்டன் பவுமா டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்ததும், பின்னர் 74 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் மீண்டதும், அவரது வீரமிகு தலைமையை எடுத்துக்காட்டுகிறது. காயம் காரணமாக ஓட முடியாத நிலையிலும் மன உறுதி கொண்டு களத்தில் நின்று அணியை வெற்றிக்கு வழிவகுத்தது, அவரது நம்பிக்கைக்குரிய தலைவர் தன்மையை வெளிக்கொணருகிறது.
இன்னும் சில சிறப்பான தகவல்கள்:
- 1998-இல் சாம்பியன்ஸ் டிராபி வென்றதிலிருந்து 2025-இல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்ற வரையிலான 9,722 நாட்கள் காத்திருப்பு இப்போது பயனளித்துள்ளது.
- 4-வது இன்னிங்ஸில் 282 ரன்கள் விரட்டிச் சென்று வென்றது, தென் ஆப்பிரிக்காவின் ஐந்தாவது பெரிய டெஸ்ட் சேசிங். இதில் நான்கு வெற்றிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே.
- லார்ட்ஸில் இது இரண்டாவது பெரிய ரன் சேசிங் வெற்றி.
- கடந்த வருடம் வெஸ்ட் இண்டீஸில் தொடங்கிய தொடர் வெற்றியை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா 8 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது – இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் புதிய சாதனை.
- 138 ரன்கள் என்ற குறைந்த முதல் இன்னிங்ஸ் ஸ்கோரில் இருந்தும் வெற்றி கண்டது, டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது முறை.
- பவுமா கேப்டனாக 10 டெஸ்ட் ஆடுகளில் தோல்வியின்றி 9 வெற்றி, 1 டிரா சாதனை படைத்துள்ளார்.
- மார்க்ரம் லார்ட்ஸில் 4-வது இன்னிங்ஸில் 136 ரன்கள் விளாசினார் – 1984-ல் ராய் பிரெட்ரிக்ஸ் விளாசிய 138 ரன்களுக்குப் பிறகு இது உயர்ந்த ஸ்கோர்.
- மார்க்ரம், 4-வது இன்னிங்ஸில் மூன்றாவது சதம் அடைந்துள்ளார். கிரேம் ஸ்மித் இதுவரை நான்கு சதங்கள் அடித்துள்ளார்.
- 74 ரன்கள் பின்தங்கிய பிறகு வெற்றியை பெற்றது, 2011-ல் கேப்டவுனில் இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இரண்டாவது முறையாகும்.