டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு வெற்றி

0

டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

திருநெல்வேலியில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில், சேலம் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இதில் நிதிஷ் ராஜகோபால் 74 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய திண்டுக்கல் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்தும் 192 ரன்கள் சேர்த்து வெற்றியை பதிவு செய்தது. அஸ்வின் 36, ஷிவம் சிங் 34, ஜெயந்த் 25, ஹுன்னு சைனி 35, விமல் குமார் 24 மற்றும் வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் எடுத்துப் பங்களித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here