பாண்டிச்சேரி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில், ஜெனித் யானம் ராயல்ஸ் அணி, காரைக்கால் நைட்ஸ் அணியை 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
புதுச்சேரி சீகெம் மைதானத்தில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில், முதலில் ஆடிய ஜெனித் யானம் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் அடித்தது. இதில் வேதாந்த் பரத்வாஜ் 104 ரன்கள், ஆதித்யா கர்வால் 76 ரன்கள் மற்றும் பரமேஷ்வரன் சிவராமன் 28 ரன்கள் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்த காரைக்கால் நைட்ஸ் அணி 215 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கியது. ஆனால், அந்த அணியின் கேபாரமான முயற்சியும் பலிக்காமல் 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்களில் ஒதுங்கியது.
யானம் ராயல்ஸ் பந்து வீச்சில் சிறந்து விளங்கிய சந்தீப் பாஸ்வான் 4 விக்கெட்டுகள், கண்ணன் விக்னேஷ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் சதம் அடித்த வேதாந்த் பரத்வாஜ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.