ஹாம்பர்க் டென்னிஸில் பல்கேரிய வீராங்கனை கால் இறுதிக்கு முன்னேறினார்
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்று வரும் டபிள்யூடிஏ ஹாம்பர்க் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், பல்கேரியாவைச் சேர்ந்த வீராங்கனை விக்டோரியா டொமாவா கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
கால் இறுதிக்கு முன்னர் நடந்த சுற்றுப் போட்டியில், அவர் ஆஸ்திரேலிய வீராங்கனை அஸ்ட்ரா சர்மாவுடன் நேருக்கு நேர் மோதினார். இந்தப் போட்டியில் டொமாவா தன்னம்பிக்கையுடன் ஆடி, 6-1, 6-1 என்ற நேர் செட்கள் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.
கால் இறுதியில், விக்டோரியா டொமாவா, பிரான்ஸைச் சேர்ந்த வீராங்கனை லாயிஸ் போய்சனை எதிர்கொள்ள இருக்கிறார்.
Related
Facebook Comments Box