மாநில டேபிள் டென்னிஸ் ரேங்கிங் போட்டி: கால் இறுதியில் ஷர்வானி, மேகன்

Daily Publish Whatsapp Channel

மாநில டேபிள் டென்னிஸ் ரேங்கிங் போட்டி: கால் இறுதியில் ஷர்வானி, மேகன்

சென்னையில் உள்ள ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில், யு-19 பிரிவின் ஆண்கள் மற்றும் பெண்கள் துறைகளில் கால் இறுதிக்கு பலர் தகுதி பெற்றுள்ளனர்.

யு-19 மகளிர் பிரிவில், மயிலாப்பூர் கிளப்பைச் சேர்ந்த என். ஷர்வானி, பிடிடிஏ அணியைச் சேர்ந்த எஸ். வர்ஷினியை 11-5, 11-2, 11-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் முன்னேறினார்.

மேலும், ஹன்சினி (சென்னை), நந்தினி (எம்விஎம்), மெர்சி (ஏசிஇ), ஷாமீனா ஷா (மதுரை), அனன்யா (சென்னை அச்சீவர்ஸ்), புவனிதா (மதுரை), வர்னிகா (ஈரோடு) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

யு-19 ஆடவர் பிரிவில், சென்னை அச்சீவர்ஸ் கிளப்பைச் சேர்ந்த எஸ். மேகன், சிடிடிஎஃப் அணியின் ஆகாஷ் ராஜவேலுவை 11-7, 12-10, 11-8 என்ற செட்களில் தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

அவருடன் சேர்ந்து, பாலமுருகன் (ஐடிடிசி), நிகில் மேனன் (எம்எஸ்டி), அக் ஷய் பூஷன் (எஸ்கே அகாடமி), உமேஷ் (ஆர்டிடிஹெச்பிசி), விஷ்ரூத் ராமகிருஷ்ணன் (எம்எஸ்டி), பி.பி. அபினந்த் (சென்னை அச்சீவர்ஸ்), ஸ்ரீராம் (சென்னை அச்சீவர்ஸ்) ஆகியோரும் கால் இறுதிக்குள் நுழைந்துள்ளனர்.

Facebook Comments Box