போட்டோஷூட்டுக்காக சங்கமித்த இந்தியா – மான்செஸ்டர் யுனைடெட் அணிகள்!
தனியார் நிறுவன ஒருங்கிணைத்த போட்டோஷூட் நிகழ்வுக்காக, இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பிரீமியர் லீக் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி, மான்செஸ்டரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் உள்ளதாகும். ஆண்டர்சன்-சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் மூன்று போட்டிகள் முடிந்து, இந்தியா 1-2 என பின்தங்கி வருகிறது. தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் புதன்கிழமை தொடங்குகிறது, இதற்காக இந்திய அணி அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதே நகரில் உள்ள மான்செஸ்டர் யுனைடெட் அணியையும், இந்திய அணியையும் சேர்ந்த வீரர்கள், பொது விளம்பர போட்டோஷூட்டுக்காக சந்தித்தனர். இந்த சந்திப்பில், இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், மான்செஸ்டர் யுனைடெட்டின் கேப்டன் புருனோ பெர்னாண்டஸ், இரு அணிகளின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
சந்திப்பின் போது இரு அணிகள் தங்களது ஜெர்சிகளை பரிமாறிக் கொண்டு, நட்புறவின் அடையாளமாக ஒரு சிறப்பு தருணத்தை பகிர்ந்தனர். கூடுதலாக, சில நேரம் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடியும் மகிழ்ந்தனர்.
இந்த ஒத்துழைப்பும், வீரர்கள் இடையிலான நட்பும் ரசிகர்களை பெரிதும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.