பிரான்ஸ் செஸ் போட்டி: இந்தியாவின் இனியன் சாம்பியன் பட்டம் வெற்றி

பிரான்ஸ் செஸ் போட்டி: இந்தியாவின் இனியன் சாம்பியன் பட்டம் வெற்றி

பிரான்ஸ் நாட்டின் அக்ஸ் அன் ப்ரொவேன்ஸ் நகரத்தில், ஜூலை 19 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற ‘டோல் டிராபி மாஸ்டர்ஸ் 2025’ சர்வதேச செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் இனியன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில், இனியன் 6 போட்டிகளில் வெற்றி பெற்று, 3 போட்டிகளை சமமாக முடித்தார். இதன் மூலம், 7.5 புள்ளிகளைப் பெற்ற அவர், போலந்தைச் சேர்ந்த ஜான் மலேக் உடன் முதலிடம் பகிர்ந்தார்.

வெற்றியாளரைத் தீர்மானிக்க, முதல் ரேபிட் முடிசூட்டுப் போட்டி நடத்தப்பட்டது. இது டிராவாக முடிந்தது. அதன் பின்னர், இரண்டாவது ரேபிட் சுற்றில் 1.5 – 0.5 புள்ளிகள் வித்தியாசத்தில் இனியன் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதியாக சாம்பியன் பட்டத்தை உறுதிப்படுத்தினார்.


ஆகஸ்ட் 11: பள்ளி மாணவர்களுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் – சென்னை

சென்னை மாவட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களுக்கான பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஆகஸ்ட் 11 முதல் 13ஆம் தேதி வரை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வை சென்னை மாவட்ட வாலிபால் சங்கமும், சேன் அகாடமி பள்ளிகள் குழுமமும் இணைந்து நடத்துகின்றன. போட்டியில் பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு, 9444842628 அல்லது 9841816778 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Facebook Comments Box