ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட்டுக்கு ஐசிசி அபராதம் விதித்தது
மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய டிம் டேவிட்டுக்கு, ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 5-0 என முழுமையாக வெற்றி பெற்றது. இதில் கடைசி போட்டி ஜூலை 28ஆம் தேதி நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் டிம் டேவிட் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தை விதிமுறைகளை மீறியதாகக் கூறி, டேவிட்டுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி விதிகளின் பிரிவு 2.8-ஐ டேவிட் மீறியதாகும். இந்த பிரிவு, போட்டி நடுவரின் தீர்மானத்துக்கு எதிராக காட்டப்படும் எதிர்வினைகளை குறிக்கிறது. அவர் இந்த விதியை மீறியதாகக் கண்டறியப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.