கூடைப்பந்து: நாளந்தா அணி அபார வெற்றி!
சிபிஎஸ்இ பள்ளிகள் மத்தியில் நடைபெறும் கூடைப்பந்து போட்டியில், ஆண்கள் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது.
சென்னை அருகேயுள்ள கவரைப்பேட்டையில் அமைந்துள்ள ஆர்.எம்.கே பாடசாலையில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், கிருஷ்ணகிரி நாளந்தா இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் அணி, 35-31 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி அணியை தோற்கடித்து சாமர்த்தியத்தை நிரூபித்தது.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், மதுரை ஸ்ரீ அரபிந்தோ மீரா யுனிவர்சல் பள்ளி அணி, 31-17 என்ற புள்ளிகளால் மணப்பாக்கம் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை வென்றது.
அதேபோல் ஆண்கள் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில், வைரம்ஸ் பப்ளிக் பள்ளி அணி, 21-06 என்ற கணக்கில் ஸியோன் ஜெனிசிஸ் அணியை தோற்கடித்து வெற்றிகொண்டது.