ஜூலை மாத சிறந்த வீரர் விருது – ஷுப்மன் கில்லின் பெயர் பரிந்துரை!
ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்காக இந்திய அணியின் தலைவராக உள்ள ஷுப்மன் கில்லின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிறந்த விளையாட்டாளரை தெரிவு செய்து கௌரவிக்கும் பணியை ஐசிசி மேற்கொண்டு வருகிறது. இதற்கமைய, ஜூலை மாத சிறந்த வீரர் விருதிற்காக மூன்று வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ஷுப்மன் கில், இங்கிலாந்தின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் வியான் முல்டர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், ஷுப்மன் கில் அபாரமாக விளையாடி 754 ரன்கள் எடுத்ததன் காரணமாகவே அவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.