சர்ஃபிங்கில் 4 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தகுதி!

ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு நடத்தும் ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் 2025, மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெற்று வருகிறது.

இதன் 5வது நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஆடவர் ஓபன் பிரிவில், ஹீட் 2-ல் இந்தியாவின் ரமேஷ் புடிஹால் 11 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஹீட் 7-ல் கிஷோர் குமார் 10.14 புள்ளிகள் பெற்று 2வது இடம், ஹீட் 8-ல் ஸ்ரீகாந்த் 8.90 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

18 வயதுக்குட்பட்ட சிறுவர் பிரிவில், ஹீட் 5-ல் இந்தியாவின் பி. ஹரிஷ் 9.50 புள்ளிகள் பெற்று 2வது இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறினார். ஆனால், தைன் அருண் மற்றும் பிரஹ்லாத் ராம் வெளியேறினர்.

18 வயதுக்குட்பட்ட சிறுமியர் பிரிவின் 2வது சுற்று (ரெப்பேஜ்) போட்டியில், இந்தியாவின் ஆத்யா சிங் மற்றும் தமயந்தி ராம் ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

Facebook Comments Box