கூடைப்பந்தில் பல பிரிவுகளில் வெற்றி – டிஏவி, வேலம்மாள், சுகுணா பிஐபி சாம்பியன்கள்
சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எம்.கே. பாடசாலா பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. 200 பள்ளிகள் பங்கேற்ற இந்த தொடரில் பல பிரிவுகளில் சிறந்த அணிகள் தங்கப் பதக்கம் வென்றன.
- யு-14 சிறுமியர் பிரிவு: பருத்திப்பட்டு வேலம்மாள் அணி, இறுதியில் செங்கல்பட்டு விகாஷ் மந்த்ரா அணியை 50–27 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
- யு-14 சிறுவர் பிரிவு: பொன்னேரி வேலம்மாள் அணி, தூத்துக்குடி விகாஷ் பள்ளியை 46–21 என தோற்கடித்து சாம்பியன்.
- யு-17 சிறுமியர் பிரிவு: கோவை சுகுணா பிஐபி பள்ளி முதலிடம்.
- யு-17 சிறுவர் பிரிவு: பொன்னேரி வேலம்மாள் சர்வதேச பள்ளி முதலிடம்.
- யு-19 சிறுமியர் பிரிவு: முகப்பேர் டிஏவி பள்ளி, ஹார்ட்ஃபுல்னெஸ் இன்டர்நேஷனல் பள்ளியை 46–44 என்ற நெருக்கமான கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.
- யு-19 சிறுவர் பிரிவு: ஆலப்பாக்கம் வேலம்மாள் பள்ளி முதலிடம்.
பரிசளிப்பு விழாவில் ஆர்.எம்.கே கல்விக் குழுமத் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், துணைத் தலைவர் கிஷோர், இயக்குனர் ஜோதி நாயுடு, செயலாளர் எலமஞ்சி பிரதீப், துணைத் தலைவர் துர்காதேவி பிரதீப், முதல்வர் சந்திரிகா பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு கூடைப்பந்து சங்க மூத்த துணைத் தலைவர் செந்தில் தியாகராஜன், இணை செயலாளர் அருள் வெங்கடேஷன், இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீனா ஜக்காரியா, திருவள்ளூர் மாவட்ட சங்க துணைத் தலைவர் ராஜ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.