பாகிஸ்தானுக்கு பதிலடி – மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி

டிரினிடாட்டில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மழை காரணமாக ஆட்டம் 37 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 37 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 171 ரன்கள் எடுத்தது. ஹசன் நவாஸ் – 36, ஹுசைன் தலத் – 31, அப்துல்லா ஷபிக் – 26, சைம் அயூப் – 23, கேப்டன் முகமது ரிஸ்வான் – 16 ரன்கள் பங்களித்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்கள் எடுத்தார்.

டக்வொர்த்–லீவிஸ் விதிமுறையின்படி இலக்கு 35 ஓவர்களில் 181 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை நோக்கி விளையாடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 33.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழந்து 184 ரன்கள் எடுத்தது.

ஷெர்பேன் ரூதர்போர்டு – 45 (33 பந்துகளில், 3 சிக்ஸர், 4 பவுண்டரி),

ராஸ்டன் சேஸ் – 49 (47 பந்துகளில், 2 சிக்ஸர், 4 பவுண்டரி),

ஜஸ்டின் கிரீவ்ஸ் – 26 (31 பந்துகளில், 1 சிக்ஸர்) என முக்கிய ரன்கள் சேர்த்தனர்.

இந்த வெற்றியால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் 1–1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. தீர்மானிக்கும் 3-வது ஆட்டம் இன்று இரவு நடைபெற உள்ளது.

Facebook Comments Box