ஆசிய கோப்பை பாகிஸ்தான் அணி அறிவிப்பு: பாபர், ரிஸ்வானுக்கு இடமில்லை!

வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதிர்ச்சியாக, அனுபவமிக்க வீரர்களான பாபர் அஸம் மற்றும் முகமது ரிஸ்வான் அணியில் இடம்பெறவில்லை.

இந்த முடிவு பாகிஸ்தான் ரசிகர்களையும் கிரிக்கெட் வல்லுநர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த முன்னணி பேட்ஸ்மேன்களில் பாபர், ரிஸ்வான் இருவருமே டாப்-10 பட்டியலில் உள்ளவர்கள். தற்போது ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாபர் 18-வது இடத்திலும், ரிஸ்வான் 20-வது இடத்திலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் தான் இருவரும் பாகிஸ்தான் அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடியிருந்தனர். அதன்பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், டி20 வடிவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிய கோப்பை 2025-க்கு பாகிஸ்தான் அணி:

சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்ஸான், சஹீப்ஸாதா ஃபர்ஹான், சல்மான் மிர்ஸா, ஷஹீன் ஷா அப்ரிடி, சுஃப்யான் மொகிம்.

ஆசிய கோப்பை விவரம்:

2025 செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளும் குறைந்தது மூன்று முறை நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு உள்ளது. முதன்மை குரூப் சுற்றில், செப்டம்பர் 14-ம் தேதி துபாயில் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடைபெற உள்ளது.

Facebook Comments Box