தங்கம் வென்றார் அனந்த் ஜீத் நருகா!

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் அனந்த் ஜீத் நருகா தங்கப் பதக்கம் வென்றார்.

ஆண்கள் ஸ்கீட் இறுதியில், நருகா 57-56 என்ற கணக்கில் முன்னாள் ஆசிய விளையாட்டு சாம்பியன், குவைத்தின் மன்சூர் அல் ரஷிதியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் கைப்பற்றினார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில், இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங் – சவுரப் சவுத்ரி ஜோடி 17-9 என்ற கணக்கில் சீன தைபேயின் லியு ஹெங் யு – ஹ்சீ ஹ்சியாங் சென் ஜோடியை தோற்கடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. இப்பிரிவில், சீனா 16-12 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் கைப்பற்றியது.

ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில், இந்தியாவின் வன்ஷிகா சவுத்ரி – கவின் அந்தோஷி ஜோடி 16-14 என்ற கணக்கில் தென் கொரியாவின் கிம் யெஜின் – கிம் டூயோன் ஜோடியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

Facebook Comments Box