பாபர் அசாம், ரிஸ்வான் மீதம் மேலும் தண்டனை: மைய ஒப்பந்தத்தில் தாழ்வு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்கள் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளது, அதில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் தங்கள் முந்தைய உயர்ந்த நிலையிலிருந்து குறைவாக வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான அணியிலிருந்து பாபர் அசாம், ரிஸ்வான் நீக்கப்பட்டதை தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் விதமாக இவர்கள் நிலை ஏ-பிரிவில் இருந்து பி-பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த முறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிரிவு-ஏ என்பதை ஒழித்துள்ளது.

பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் கடந்த வருட வீரர்கள் ஒப்பந்தத்தில் ஏ-பிரிவில் இருந்த இரண்டு வீரர்களாக இருந்தனர். இப்போது அவர்கள் பி-பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பி-பிரிவில் உள்ள 10 வீரர்கள்: அப்ரார் அகமது, பாபர் அசாம், ஃபகர் ஜமான், ஹாரிஸ் ராவுஃப், ஹசன் அலி, முகமது ரிஸ்வான், சயிம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷதாப் கான், ஷாஹின் ஷா அஃப்ரீடி.

சி-பிரிவில் சேர்க்கப்பட்ட 10 வீரர்கள்: அப்துல்லா ஷஃபீக், ஃபாஹீம் அஷ்ரஃப், ஹசன் நவாஸ், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், நசீம் ஷா, நோமன் அலி, ஷகிப்சதா ஃபர்ஹான், சஜித் கான், சவுகத் ஷகீல்.

டி-பிரிவு வீரர்கள்: அகமது டேனியால், ஹுசைன் தலத், குர்ரம் ஷஜாத், குஷ்தில் ஷா, முகமது அப்பாஸ், முகமது அப்பாஸ் அப்ரீடி, முகமது வாசிம் ஜூனியர், சல்மான் மிர்ஸா, ஷான் மசூத், சுஃபியான் மொகிம்.

கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 25 வீரர்களுக்கு ஒப்பந்தம் அளித்தது. இந்த முறை எண்ணிக்கை 25-இல் இருந்து 30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பி-பிரிவு வீரர்கள் 4.55 மில்லியன் ரூபாய், சி-பிரிவு வீரர்கள் 2.03 மில்லியன் ரூபாய், டி-பிரிவு வீரர்கள் 1.26 மில்லியன் ரூபாய் பெறுவார்கள்.

Facebook Comments Box