“மலைப்பகுதியில் பயிற்சி பெறுவது தடகள வீரர்களுக்கு மிகுந்த பலனளிக்கும்” – இந்திய வீராங்கனை ஷர்வானி சாங்லே

“மலைப்பகுதியில் நடத்தப்படும் பயிற்சி, தடகள வீரர்களின் திறனை அதிகரிக்க உதவும்” என்று இந்திய தடகள வீராங்கனையும், தெற்காசிய சாம்பியனுமான ஷர்வானி சாங்லே கூறினார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட விளையாட்டு அரங்கில், கிரசண்ட் பள்ளியின் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் உமர் பாரூக் மற்றும் நகராட்சி துணைத் தலைவர் ஜே. ரவிகுமார் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்களாக பாரா ஒலிம்பிக் தடகள வீரர் திலீப் காவிட், இந்திய வீராங்கனை ஷர்வானி சாங்லே மற்றும் பயிற்சியாளர் வைஜ்நாத் காலே கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷர்வானி சாங்லே, “நீலகிரியின் வானிலை தடகள பயிற்சிக்குப் பொருத்தமானது. நாங்கள் ஒரு மாத காலமாக இங்கே பயிற்சி பெற்று வருகிறோம். மலைப்பகுதியில் பயிற்சி மேற்கொள்வது, போட்டித் தளத்தில் நல்ல விளைவுகளைத் தருகிறது. சிறு வயதிலிருந்தே மாணவர்கள் விளையாட்டில், குறிப்பாக தடகளத்தில் ஈடுபடுவது அவசியம்” என்றார்.

தடகள பயிற்சியாளர் வைஜ்நாத் காலே கூறுகையில், “நீலகிரி மாவட்டம் விளையாட்டுக்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டுள்ளது. அடுத்த பி.டி. உஷா, நீரஜ் சோப்ரா போன்ற வீரர்களை உருவாக்க, இத்தகைய சூழல் முக்கிய பங்காற்றும்” என்றார்.

Facebook Comments Box