கிரீன், ஹெட், மார்ஷ் சதம் – ஆஸ்திரேலியா 431 ரன்கள் குவிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 431 ரன்கள் குவித்து ஆட்டம் களைகட்டியது.
குயின்ஸ்லாந்து, மெக்கே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்காக, டிராவிஸ் ஹெட் (142), கேப்டன் மிட்செல் மார்ஷ் (100), கேமரூன் கிரீன் (118) ஆகியோர் சதம் அடித்தனர். மேலும், அலெக்ஸ் கேரி அரைசதம் (50) சேர்த்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 431 ரன்கள் எடுத்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா எடுத்த மிக அதிக ரன்களில் இது இரண்டாவது இடம். (முதலிடம் – 434 ரன்கள், 2006, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக).
வெற்றிக்காக 432 ரன்கள் தேவைப்படும் தென் ஆப்பிரிக்கா, 14 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களில் தடுமாறி வருகிறது.