உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றை வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறிய சிந்து

பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முதல்சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில், உலக தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சிந்து, பல்கேரியாவின் 69-வது நிலை வீராங்கனை கலோயானா நல்பன்டோவாவை எதிர்கொண்டார். கடுமையான முதல் செட் போட்டியில் 23-21 என வென்ற சிந்து, இரண்டாவது செட்டில் 21-6 என்ற எளிதான கணக்கில் வெற்றி பெற்று, நேர்செட்களில் (2-0) ஆட்டத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் சிந்து 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Facebook Comments Box