இறுதி சுற்றுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடரில் இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடி, கிராண்ட் செஸ் டூரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் பிரக்ஞானந்தா, அமெரிக்க வீரர்கள் வெஸ்லி சோ மற்றும் பேபியானோ கருனா ஆகியோர் தலா 5.5 புள்ளிகள் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டங்கள் நடத்தப்பட்டன.

டைபிரேக்கர் சுற்றில், பிரக்ஞானந்தா தனது முதல் ஆட்டத்தில் கருனாவை வீழ்த்தினார். ஆனால், அடுத்த ஆட்டத்தில் வெஸ்லி சோவிடம் தோல்வியடைந்தார். பின்னர் வெஸ்லி சோ தனது 2-வது ஆட்டத்தில் கருனாவுடன் சமநிலை பெற்றார். இதன் மூலம் வெஸ்லி சோ 1.5 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பிரக்ஞானந்தா 2-வது இடத்தில் தொடரை முடித்தாலும், அந்த சாதனை அவருக்கு கிராண்ட் செஸ் டூரின் இறுதிப் போட்டிக்கான தகுதியை உறுதிசெய்தது.

Facebook Comments Box