உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் – கால் இறுதியில் பி.வி. சிந்து தோல்வி

பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார்.

ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற சிந்து, இந்தோனேஷியாவின் 9-வது நிலை வீராங்கனை புத்ரி குசுமா வர்தனுடன் மோதினார். 64 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் சிந்து 14-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் போராடியபோதிலும் வெற்றியைப் பெற முடியவில்லை.

இதனால், உலக சாம்பியன்ஷிப்பில் 6-வது முறையாக பதக்கம் வெல்லும் சிந்துவின் கனவு முறியடிந்தது.

Facebook Comments Box