ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் ராகுல் திராவிட் திடீர் விலகல்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் திராவிட் திடீரென விலகியுள்ளார். ஐபிஎல் 2025 சீசனுக்காக அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். காலில் காயம் ஏற்பட்டிருந்த போதும், வீல் சேர் மூலம் அணிக்கு ஆலோசனைகள் வழங்கியார்.

அணி நிர்வாகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராகுல் திராவிட் பல வருடங்களாக ராயல்ஸ் அணியின் பயணத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவரது தலைமையில் அணியில் வலுவான மதிப்புகள் வளர்ந்துள்ளன, கலாச்சாரத்தில் ஒரு நிலைத்த பதிப்பும் உருவானது. அணியின் மதிப்பாய்வில் அவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. அணிக்காகவும், வீரர்களுக்காகவும் அவர் செய்த சேவைக்கு நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

விலகலுக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாக குறிப்பிடவில்லை. ஆனால் 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன் சஞ்சு சாம்சன் உடற்தகுதி பிரச்சினை காரணமாக சில ஆட்டங்களில் விளையாடவில்லை. அதற்கிடையில் அதிரடி பேட்ஸ்மேன் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். அணியில் ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல் போன்ற வீரர்கள் இருந்தபோது ரியான் பராக் முன்னிலை வகித்ததை ராகுல் திராவிட் மற்றும் சஞ்சு சாம்சன் அதிருப்தியாகக் கவனித்ததாக கூறப்படுகிறது.

2026-ஆம் ஆண்டு தொடருக்கான அணியை கட்டமைப்பதில், ரியான் பராக் கேப்டனாக நியமிக்க அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ராகுல் திராவிட் விலகியிருக்கலாம் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments Box