சாட்விக் – ஷிராக் ஜோடி அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கம் உறுதி
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில், ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்கள் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – ஷிராக் ஷெட்டி இணை, மலேசியாவின் ஆரோன் சியா – சோ வூய் யிக் ஜோடியை எதிர்கொண்டனர்.
கடுமையான போட்டியில், சாட்விக் – ஷிராக் இணை 21–12, 21–19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.
கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இதே மலேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்ததால், அப்போது பதக்கம் வாய்ப்பை இழந்திருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த வெற்றி அமையப்பெற்றது.
அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம், இந்திய ஜோடி குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் பெற்றதை உறுதி செய்துள்ளது.
Facebook Comments Box