ஆசிய துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு சாதனை 99 பதக்கங்கள்

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற 16-வது ஆசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போட்டியின் இறுதி நாளான நேற்று, இந்திய வீரர்-வீராங்கனைகள் மொத்தம் 99 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர். இதில் 50 தங்கம், 26 வெள்ளி மற்றும் 23 வெண்கல பதக்கங்கள் அடங்கும்.

இதையடுத்து, 21 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்ற கஜகஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் நிற்றது.


சென்னை மாவட்ட வாலிபால் போட்டிகள் – செப்டம்பர் 11 முதல்

சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆடவர் வாலிபால் மற்றும் மகளிர் வாலிபால் போட்டிகள் செப்டம்பர் 11 முதல் 14 வரை நடைபெற உள்ளன. எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளை சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், சங்கத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் மூலம் பதிவு செய்யலாம்.


திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி – இந்தியன் வங்கி சாம்பியன்

எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில், இந்தியன் வங்கி அணி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை 4–3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழக சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ். எம். நாசர் பரிசுகளை வழங்கினார். நிகழ்வில் எம்எல்ஏ பரந்தாமன், இந்திய ஹாக்கி முன்னாள் கேப்டன் வி. பாஸ்கரன், ஹாக்கி திருவள்ளூர் தலைவர் டாக்டர் பிரகாஷ் அய்யாதுரை, முன்னாள் வீரர்கள் முகமது ரியாஸ், திருமாவளவன் மற்றும் பயிற்சியாளர் சி. ஆர். குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box