புஜைரா செஸ் போட்டியில் இந்தியாவின் பிரணவ் சாம்பியன்

ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா நகரில் நடைபெற்ற புஜைரா குளோபல் சூப்பர் ஸ்டார்ஸ் சர்வதேச செஸ் தொடரில், இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் மற்றும் உலக ஜூனியர் சாம்பியனான பிரணவ் வெங்கடேஷ் பட்டத்தை கைப்பற்றினார்.

மொத்தம் 9 சுற்றுகளில் 7 புள்ளிகள் சேர்த்த அவர், முதலிடம் பிடித்து சாம்பியனாகத் திகழ்ந்தார். இறுதிச்சுற்றில் ஸ்பெயின் கிராண்ட்மாஸ்டரான ஆலன் பிச்சோட்டுடன் வெள்ளை காய்களுடன் மோதிய பிரணவ், 54-ஆவது நகர்த்தலில் வெற்றியைப் பெற்றார்.

இந்தப் போட்டியில் பிரணவ் 5 ஆட்டங்களில் வெற்றி பெற்று, 4 ஆட்டங்களை சமனில் முடித்தார். சாம்பியனாக வெற்றி பெற்றதற்காக ரூ.20.25 லட்சம் பரிசுத் தொகையையும், கூடுதலாக 28 இஎல்ஓ மதிப்பெண்களையும் பெற்றார்.

Facebook Comments Box