புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் இறுதியில் மோதுகின்றன

சென்னையில் நடைபெற்ற புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி ஜம்மு & காஷ்மீர் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சிஎஸ்கே உயர் செயல்திறன் மையத்தில் நடந்த இப்போட்டியில், டிஎன்சிஏ அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 567 ரன்கள் எடுத்துவிட்டு இன்னிங்ஸ் முடிவை அறிவித்தது. அதற்கு பதிலளித்த ஜம்மு & காஷ்மீர் அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்களுக்கு 212 ரன்கள் எடுத்திருந்தது.

நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில், ஜம்மு & காஷ்மீர் அணி 74 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. யாவர் ஹசன் அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார். டிஎன்சிஏ அணிக்காக வித்யுத் 7 விக்கெட்களும், ஹெம்சுதேஷன் 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் முன்னிலை பெற்ற டிஎன்சிஏ அணி இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. போட்டியின் சிறந்த வீரராக வித்யுத் தேர்வு செய்யப்பட்டார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டம் குருநானக் கல்லூரி மைதானத்தில் ஹரியானா – ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்றது. 272 ரன்கள் இலக்கை துரத்திய ஹரியானா அணி, நேற்றைய இறுதி நாள் 62.4 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஹைதராபாத் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.

வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில், டிஎன்சிஏ பிரெஸிடெண்ட் லெவன் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

Facebook Comments Box