பணமோசடி வழக்கு – அமலாக்கத் துறை முன் ஆஜரான ஷிகர் தவண்
ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவண் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜரானார்.
இவ்வழக்கில் விசாரணைக்காக அவர் நேற்று காலை 11 மணியளவில் டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, இதே விவகாரத்தில் கடந்த மாதம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Facebook Comments Box