சமாவோ அணியில் விளையாடவுள்ள ராஸ் டெய்லர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர், 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். தனது நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் 112 டெஸ்ட், 236 ஒருநாள் மற்றும் 102 டி20 சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டார்.

டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் உள்பட 7,683 ரன்கள் சேர்த்திருந்தார். ஒருநாள் ஆட்டங்களில் அவர் குவித்த ரன்கள் 8,607 ஆகும். டி20 போட்டிகளில் 1,909 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்நிலையில், 41 வயதான ராஸ் டெய்லர், மீண்டும் மைதானத்தில் களம் காண முடிவு செய்து, சமாவோ கிரிக்கெட் அணிக்காக விளையாட உள்ளார்.

Facebook Comments Box