உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியா தங்கம் வெற்றி
தென்கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் உலக வில்வித்தைப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றுள்ளது.
நேற்றைய ஆண்கள் காம்பவுண்ட் பிரிவு இறுதிப் போட்டியில், இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் புஜே ஆகியோர் இணைந்து, பிரான்ஸ் அணியை 235-233 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றனர்.
மேலும், கலப்பு அணிப் பிரிவில் ரிஷப் யாதவ் மற்றும் ஜோதி சுரேகா வென்னம் இணைந்து விளையாடி, வெள்ளிப் பதக்கம் பெற்றனர்.
Facebook Comments Box