யுஎஸ் ஓபன் டென்னிஸ்: அல்கராஸ் மீண்டும் சாம்பியன்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனும் உலகின் முதலிடம் வகிக்கும் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், 2-வது நிலை வீரரான அல்கராஸை எதிர்கொண்டார். இந்த ஆண்டு நடைபெறும் 3-வது கிராண்ட் ஸ்லாம் இறுதியில் நேருக்கு நேர் மோதியதால், போட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

சுமார் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில், அல்கராஸ் 6-2, 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.

வெற்றி பெற்ற அல்கராஸ் ரூ.41.4 கோடி பரிசுத் தொகையை பெற்றார். இரண்டாம் இடம் பிடித்த சின்னருக்கு ரூ.20.75 கோடி வழங்கப்பட்டது.

யுஎஸ் ஓபனில் அல்கராஸுக்கு இது இரண்டாவது வெற்றி. அவர் 2022-ம் ஆண்டிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதன்மூலம், தனது 6-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

Facebook Comments Box