“உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் நவாஸ் தான்” – மைக் ஹெசன் பாராட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான முகமது நவாஸ் தற்போது உலகின் மிகச்சிறந்த ஸ்பின்னர் என்று அணி பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் மோத உள்ள நிலையில், வியாழக்கிழமை மைக் ஹெசன் நவாஸை உயர்ந்து புகழ்ந்தார். சமீபத்தில் முடிந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நவாஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

“நவாஸைப் போன்ற ஒரு ரிஸ்ட் ஸ்பின்னர் அணியில் இருக்கும்போது பீட்ச் எப்படி இருந்தாலும் பிரச்சினை இல்லை. எங்கள் அணியில் மொத்தம் ஐந்து ஸ்பின்னர்கள் உள்ளனர்; அவர்களில் நவாஸ் மிகச்சிறந்தவர். கடந்த ஆறு மாதங்களாக அவரது ஆட்டம் அப்படித்தான் இருக்கிறது.

அப்ரார் அகமது, சுஃப்யான், சயிம் அயூப், சல்மான் அலி ஆகா ஆகியோரும் அணியில் உள்ளனர். இருப்பினும், ஆட்டம் நடைபெறும் சூழ்நிலைப் பொறுத்தே இறுதி முடிவு எடுப்போம். அதேசமயம் எங்கள் பேட்ஸ்மேன்களும் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகின்றனர்” என ஹெசன் கூறினார்.

Facebook Comments Box