ஆசிய கோப்பை: பாகிஸ்தான் – ஓமன் இன்று மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இத்தேவையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் இன்று ஓமன் அணியுடன் மோதுகிறது. ஆட்டம் இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும்.
சமீபத்தில் முத்தரப்பு டி20 தொடரில் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. துபாய் அரங்கில் சுழலுக்கு உகந்த நிலை இருக்கலாம் என்பதால், அப்ரார் அகமது, சுஃபியான் முகீம், முகமது நவாஸ் உள்ளிட்ட சுழற்பந்து வீரர்கள் ஓமன் அணிக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
பேட்டிங்கில் சைம் அயூப், பஹர் ஸமான், கேப்டன் சல்மான் ஆகா ஆகியோர் முக்கிய பங்களிப்பை தரக்கூடும். வேகப்பந்து வீரர்கள் ஷாகின் ஷா அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப் அணிக்கு வலிமை சேர்க்கக் கூடும்.
முதன்முறையாக ஆசியக் கோப்பையில் பங்கேற்கும் ஓமன் அணி, அழுத்தத்துடனும், பெரிய கனவுடன் களமிறங்குகிறது.