பி-டிவிஷன் வாலிபால் சாம்பியன்ஷிப்: தெற்கு ரயில்வே அணிக்கு வெற்றி!

சென்னை மாவட்ட பி-டிவிஷன் ஆண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் மற்றும் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகள் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன.

ஆண்கள் பிரிவு காலிறுதியில், எஸ்ஆர்எம் அகாடமி அணி ஜேப்பியார் பல்கலைக்கழகத்தை 3-0 என வீழ்த்தி அரையிறுதிக்குச் சென்றது.

அதேபோல், எஸ்டிஏடி அணி 3-1 என்ற கணக்கில் தமிழக காவல்துறையை தோற்கடித்தது.

ஜிஎஸ்டி அணி 3-0 என டிபி ஜெயின் கல்லூரியை வென்றது.

லயோலா கல்லூரி 3-0 என்ற கணக்கில் சென்னை மாநகர காவல்துறையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் பிரிவு காலிறுதியில், எஸ்டிஏடி அணி 2-1 என்ற கணக்கில் தமிழக காவல்துறையை வென்றது.

தெற்கு ரயில்வே 2-0 என எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியை தோற்கடித்தது.

கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் பெல்லோஷிப் அணி 2-0 என சென்னை பிரண்ட் கிளப்பை வீழ்த்தி அரையிறுதிக்குச் சென்றது.

Facebook Comments Box