ஹாங்காங் பாட்மிண்டன்: இறுதிப் போட்டிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று ஹாங்காங்கில் நடந்த அரையிறுதியில், சாத்விக்–சிராக் ஜோடி, தைவானை சேர்ந்த சென் செங் குவான் – லின் பிங் வை ஜோடியை 21-17, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தியது.

ஒற்றையர் இறுதிக்கு லக்ஷயா சென்: ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சீன தைபேயின் சவுடியென் சென்னுடன் மோதினார்.

கடுமையான போட்டியில், லக்ஷயா சென் 23-21, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இறுதிப் போட்டியில் அவர் சீன வீரர் லி ஷிபெங்கை எதிர்கொள்ள உள்ளார்.

Facebook Comments Box