ஆசிய கோப்பை: குல்தீப், அக்சர் அசத்தல் – 127 ரன்களில் முடிந்தது பாகிஸ்தான் இன்னிங்ஸ்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப்-ஏ ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, இந்தியா எதிராக 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஆரம்பத்தில் சயீம் அயூப் (0), முகமது ஹாரிஸ் (3) விரைவில் வெளியேறினர். அதன்பின் பகர் ஸமான், சல்மான் ஆகா, ஹசன் நவாஸ் உள்ளிட்ட வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்காமல் திரும்பினர்.

சஹிப்சதா பர்ஹான் மட்டும் 44 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அணியை தாங்கினார். இறுதியில் ஷாஹீன் ஷா அப்ரிடி 16 பந்துகளில் 33 ரன்கள் அடித்து பாகிஸ்தானுக்கு சிறிய நம்பிக்கை தந்தார்.

இந்திய பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள், அக்சர் படேல் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட் பெற்றனர்.

இந்திய அணி வெற்றி பெற 128 ரன்கள் மட்டுமே தேவை.

Facebook Comments Box