கேண்டிடேட்ஸ் தொடருக்கு ஆர். வைஷாலி தகுதி
உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஃபிடே கிராண்ட் சுவிஸ் சதுரங்க தொடரின் 11வது மற்றும் இறுதி சுற்றில், இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். வைஷாலி முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் சோங்கி டானுடன் ஆடிய போட்டி சமனில் முடிந்தது.
இதன் மூலம் வைஷாலி மொத்தம் 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதனால், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் கேண்டிடேட்ஸ் தொடரில் பங்கேற்கும் தகுதியை பெற்றுள்ளார்.
ஏற்கெனவே இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர். தற்போது, அவர்களுடன் மூன்றாவது இந்திய வீராங்கனையாக வைஷாலியும் இணைந்துள்ளார்.
Facebook Comments Box