உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி

உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. ‘ஏ’ பிரிவில் போட்டியிட்ட நடப்பு சாம்பியன் மற்றும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதல் முயற்சியில் 84.85 மீட்டர் தூரம் ஈட்டி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். நேரடியாக தகுதி பெற 84.50 மீட்டர் போதுமானதாக இருந்தது.

தகுதி சுற்றில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் மொத்தம் 37 வீரர்கள் பங்கேற்றனர். 84.50 மீட்டர் தூரம் எறிந்தவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்; இல்லையெனில் அதிக தூரம் ஈட்டிய 12 பேர் இறுதிப் போட்டியில் இடம் பெற்றனர்.

27 வயதான நீரஜ் சோப்ரா ‘ஏ’ பிரிவில் முதலாவதாக 84.85 மீட்டர் தூரம் ஈட்டி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற மற்ற வீரர்கள்:

  • கிரனடா: பீட்டர்ஸ் ஆண்டர்சன் (89.53 மீ.)
  • ஜெர்மனி: ஜூலியன் வெப்பர் (87.21 மீ.)
  • கென்யா: யேகோ ஜூலியஸ் (85.96 மீ.)
  • போலந்து: வெக்னர்டேவிட் (85.67 மீ.)
  • பாகிஸ்தான்: ஒலிம்பிக் சாம்பியன் அர்ஷத் நதீம் (85.28 மீ.)
  • அமெரிக்கா: தாம்ப்சன் கர்திஸ் (84.72 மீ.)
  • செக் குடியரசு: ஜக்குப் வட்லெஜ்ச் (84.11 மீ.)
  • இந்தியா: சச்சின் யாதவ் (83.67 மீ.)
  • ஆஸ்திரேலியா: கேமரூன் மெசென்டைர் (83.03 மீ.)
  • இலங்கை: ருமேஷ் தரங்கா பதிரகே (82.80 மீ.)

இறுதிப் போட்டி இன்று நடைபெறும்.

Facebook Comments Box