சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: சாட்விக்–ஷிராக் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில், இந்திய வீரர்கள் கலவையான முடிவுகளை சந்தித்தனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்ஷயா சென், பிரான்சின் தோமா ஜூனியர் போபோவிடம் 11-21, 10-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி – ஷிராக் ஷெட்டி இணை, மலேசியாவின் ஜூனைடி ஆரிஃப் – ராய் கிங் யாப் ஜோடியை 24-22, 21-13 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.
அதே நேரத்தில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா – தனிஷா கிரஸ்டோ ஜோடி, சீனாவின் பெங் யான் ஹீ – ஹூவாங் டாங் பிங் ஜோடியிடம் 19-21, 13-21 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தது.
Facebook Comments Box