ஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல் சுற்றோடு வெளியேறிய ஆப்கானிஸ்தான் | சூப்பர் 4 சுற்றின் முழுமையான அட்டவணை
நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. இதையடுத்து, சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் தொடர்ச்சியாக மோதும் ஆட்டங்கள் அட்டவணையில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் தொடக்கம் 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. பிரிவுகள் பின்வருமாறு:
- ‘ஏ’ பிரிவு: இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்
- ‘பி’ பிரிவு: ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங்
‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ‘பி’ பிரிவில் இருந்து இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. அதே சமயம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளன.
சூப்பர் 4 சுற்றின் முழு அட்டவணை:
- செப்.20 – இலங்கை vs வங்கதேசம் – துபாய்
- செப்.21 – இந்தியா vs பாகிஸ்தான் – துபாய்
- செப்.23 – பாகிஸ்தான் vs இலங்கை – அபுதாபி
- செப்.24 – இந்தியா vs வங்கதேசம் – துபாய்
- செப்.25 – பாகிஸ்தான் vs வங்கதேசம் – துபாய்
- செப்.26 – இந்தியா vs இலங்கை – துபாய்
இந்த ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும். சூப்பர் 4 சுற்றின் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், செப்.28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு பெறும். இறுதிப் போட்டியும் துபாயில் நடைபெற உள்ளது.