சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை அடைந்த முதல் இந்தியர்: அர்ஷ்தீப் சிங் சாதனை
ஓமன் அணியுடன் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 போட்டியில், ஒமான் வீரர் விநாயக் ஷுக்லாவை வீழ்த்தியதன் மூலம், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பவுலர் பெருமையைப் பெற்றார் அர்ஷ்தீப் சிங்.
அவரது 64-வது டி20 போட்டியில் 100-வது விக்கெட்டை அடைந்தார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை அடைந்த 25-வது பவுலர் அவர், இதில் 12 வேகப்பந்து வீச்சாளர்கள் அடங்கியுள்ளனர்.
அங்கிலாந்துக்கு எதிராக 2022-ல் டி20-யில் அறிமுகமான அர்ஷ்தீப் சிங், 3 ஆண்டுகள் 74 நாட்களில் 100 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். பஹ்ரைனின் ரிஸ்வான் பட் 2 ஆண்டுகள் 240 நாட்களில் 100 விக்கெட்டுகளை அடைந்து முதலிடம் வகிக்கிறார்.
64 போட்டிகளில் 1329 பந்துகளில் அர்ஷ்தீப் சிங் 100 விக்கெட்டுகள் சாதனை எட்டியுள்ளார், என கிரிக் இன்போ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவு கதியில் 100 டி20 சர்வதேச விக்கெட்டுகளை அடைந்த சில வீரர்கள்:
- ரஷீத் கான் – 53 போட்டிகள், 1185 பந்துகள்
- சந்தீப் லாமிச்சேன் – 54 போட்டிகள், 1220 பந்துகள்
- அர்ஷ்தீப் சிங் – 64 போட்டிகள், 1329 பந்துகள்
- வனிந்து ஹசரங்கா – 63 போட்டிகள், 1362 பந்துகள்
- ரிஸ்வான் பட் – 66 போட்டிகள், 1426 பந்துகள்
அர்ஷ்தீப் சிங்கின் சராசரி 18.37, வேகப்பந்து வீச்சாளர்களில் 3வது சிறந்தது. பஹ்ரைனின் ரிஸ்வான் பட் 16.68 சராசரி கொண்டவர் முன்னிலையில் உள்ளார். ஓமான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிலால் கான் 16.95 சராசரி கொண்டுள்ளார்.
பவர் ப்ளேயில் அதிக விக்கெட்டுகள்:
- அர்ஷ்தீப் சிங் – 43 விக்கெட்டுகள், 7.50 சிக்கன விகிதம்
- ஆப்கானின் பசலுல்லா பரூக்கி – 31 விக்கெட்டுகள், 6.55 சிக்கன விகிதம்
- பாகிஸ்தானின் ஷாஹின் ஷா அஃப்ரீடி – 31 விக்கெட்டுகள், 7.45 சிக்கன விகிதம்
- வங்கதேசம் டஸ்கின் அகமது – 30 விக்கெட்டுகள், 6.73 சிக்கன விகிதம்
டெத் ஓவர்களில் அதிக விக்கெட்டுகள்:
- அர்ஷ்தீப் சிங் – 48 விக்கெட்டுகள் முதலிடம்
- அடுத்த இடங்களில் ஈசான் கான், ஹாரிஸ் ராவுஃப், ஜுனைத் சித்திக் ஆகியோர்.