இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.

துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்காக சாஹிப்ஜாதா ஃபர்ஹான், ஃபகார் ஜமான் ஓப்பனிங் செய்ய வந்தனர். இதில் ஃபர்ஹான் 45 பந்துகளில் அரைசதம் (58 ரன்கள்) விளாசினார். ஃபகார் ஜமான் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக சயீம் அயூப் 21, ஹுசைன் டலத் 10, முகமது நவாஸ் 21, சல்மான் அலி அகா 17, ஃபஹீம் அஷ்ரம் 20 ரன்கள் எடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் அணி 171 ரன்கள் எடுத்தது.

இதனால் இந்தியா வெல்ல 172 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது, இந்த தொடரில் இதுவே அதிகபட்ச இலக்கு.

இந்திய பந்து வீச்சாளர்களில் ஷிவம் டுபே 2 விக்கெட் எடுத்தார். ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை பெற்றனர்.

Facebook Comments Box