6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியா வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் இந்தியா, பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டுபாயில் நடைபெற்ற இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது.
அவர்களின் இன்னிங்ஸில் சாஹிப்ஜாதா ஃபர்ஹான் 58, சயீம் அயூப் 21, முகமது நவாஸ் 21, ஃபஹீம் அஷ்ரஃப் 20 ரன்கள் எடுத்தனர்.
வெற்றிக்கான இலக்காக 172 ரன்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா துவக்க வீரர்கள் அபிஷேக் சர்மா (74) மற்றும் ஷுப்மன் கில் (47) ஆகியோரின் சக்திவாய்ந்த தொடக்க இணைப்பால் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது.
பின்னர் திலக் வர்மா 30, சஞ்சு சாம்சன் 13, ஹர்திக் பாண்டியா 7 ரன்கள் சேர்த்த நிலையில், 18.5 ஓவர்களில் 174 ரன்களை எட்டிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில் ஹாரிஸ் ரவூஃப் 2 விக்கெட்டும், அப்ரார் அஹமது மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
கடந்த 7 நாட்களில் இந்தியா பாகிஸ்தானை இரண்டு முறை வீழ்த்தியிருப்பது சிறப்பம்சமாகும்.