“பாகிஸ்தான் அணியின் ரசிகராக இருப்பது சுலபமல்ல” – ரசிகர்களின் விரக்தி

ஆசியக் கோப்பை இறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் தோல்வி காரணமாக அந்நாட்டு மக்கள், முன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்தியா – பாகிஸ்தான் அரசியல் உறவுகள், இம்முறை இரு அணியிலும் அனுபவம் வாய்ந்த ரோஹித் சர்மா, விராட் கோலி, பாபர் அஸம், முகமது ரிஸ்வான் ஆகியோர் இல்லாதது, இறுதியில் இந்தியா 3 விக்கெட் இழந்து 20 ரன்களில் தடுமாறிய நிலையிலிருந்து மீண்டு வெற்றி பெற்றது போன்ற காரணங்கள் பேசப்பட்டன.

ஆனால் தொடரின் லீக், சூப்பர்-4, இறுதி என இந்தியாவுடன் நடந்த மூன்று ஆட்டங்களிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

“பாகிஸ்தான் அணியின் ரசிகராக இருப்பது எளிதல்ல”,

“கடைசி ஓவர் வீச ஹாரிஸ் ரஃவூப் சரியானவர் இல்லை; அவர் வீசினால் நிச்சயம் தோல்வி தான்”,

“சல்மான் அலி ஆகா எப்படிப் கேப்டன் ஆனார் என்பது புரியவில்லை; அவரால் பேட்டிங்கோ வேறெதுவோ ஒன்றும் செய்ய முடியாது”,

“இந்திய அணி இந்த பிள்ளைகளுடன் ஆடவே கூடாது”,

“ஆட்டத்தை இழந்தும் கோப்பையை தூக்கி வந்துள்ளார் மோசின் நக்வி; ஆபரேஷன் சிந்தூரிலும் இதே சம்பவம் நடந்தது”,

“இந்த ஆசியக் கோப்பை தொடரில் ஒரு ஞாயிற்றுக்கிழமையும் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையவில்லை”

என ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Facebook Comments Box