ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் அபிஷேக் சர்மா புதிய சாதனை!
இந்தியாவின் இளம் இடதுகை பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டி20 பேட்டிங் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 தொடரில் ஏழு இன்னிங்ஸ்களில் 314 ரன்கள் குவித்திருந்தார். இதன் விளைவாக, அவர் 926 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக இங்கிலாந்தின் டேவிட் மலான், 2020-ஆம் ஆண்டு 919 புள்ளிகள் எடுத்து சாதனை படைத்திருந்தார். அந்தச் சாதனையை இப்போது அபிஷேக் முறியடித்துள்ளார்.
அதே தரவரிசையில், இந்திய வீரர் திலக் வர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
Facebook Comments Box