டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே, நமீபியா அணிகள் தகுதி பெற்றன
2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடக்க உள்ளது. 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்ற தொடர் போலவே, இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட உள்ளன.
டி20 தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாக தகுதி பெறும். மீதமான அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றி பெறுவதன் அடிப்படையில் உலகக் கோப்பைக்கான இடத்தை பெறுவர்.
இதன்படி, ஜிம்பாப்வே அணி கடைசி நான்கு தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கென்யா மற்றும் தான்சானியா அணிகளை வீழ்த்தி, அடுத்த டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது. அதேபோல், நமீபியா அணியும் உலகக் கோப்பையில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளது.
Facebook Comments Box