சர்வதேச கிரிக்கெட்டில் மிக நீண்ட நாட்கள் விளையாடிய வீரர் வில்பிரெட் ரோட்ஸ் என்பவர்தான்.
பலர் சச்சின் டெண்டுல்கர் என்று நினைப்பார்கள், ஆனால் உண்மையில் சச்சின் 24 ஆண்டுகள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். 200 டெஸ்ட்களில் 15,921 ரன்கள், 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் பெற்றார். டி20ல் ஒரே ஆட்டம் விளையாடி 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
அதே நேரத்தில், வில்பிரெட் ரோட்ஸ் 1898ல் உள்ளூர் போட்டிகளில் தொடங்கி 1899-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச அறிமுகம் பெற்றார். இடதுகை சுழற்பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் திறமையானவராக விளங்கினார்.
விளையாடிய காலம்:
- சர்வதேச டெஸ்ட்: 1899-ம் ஆண்டு ஜூன் 1 – 1930-ம் ஆண்டு ஏப்ரல் 12
- டெஸ்ட் ஆட்டங்கள்: 58
- டெஸ்ட்களில் 2,325 ரன்கள், 127 விக்கெட்கள்
- உள்ளூர் யார்க்ஷையர் அணிக்காக: 1,110 போட்டிகள், 39,969 ரன்கள், 4,204 விக்கெட்கள்
- இறுதி டெஸ்ட் ஆட்டத்தில் வயது: 53
- மொத்த கிரிக்கெட் வாழ்க்கை: 30 ஆண்டுகள் 315 நாட்கள்
இதனால், உலகக் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாடிய சாதனை வில்பிரெட் ரோட்ஸிடம் உள்ளது.
Facebook Comments Box