பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்ட பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்பாவி கிராமவாசிகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுத்ததற்காக தடைசெய்யப்பட்ட PFI இயக்கத்தைச் சேர்ந்த அடிப்படைவாதிகளால் ராமலிங்கம் 2019 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல் நகரில் தலைமறைவாக இருந்த அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகிய இருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு காலத்தில் அமைதியை விரும்பும் மாநிலமாக அறியப்பட்ட தமிழ்நாடு, இன்று அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. காவல்துறை பாதுகாப்புடன் சமீபத்தில் நடந்த ஒரு பயங்கரவாதியின் இறுதிச் சடங்கு, திமுக மற்றும் அதன் கூட்டாளிகளால் நடத்தப்பட்ட ஆழமான வேரூன்றிய வாக்கு வங்கி அரசியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அண்ணாமலை கூறினார்.

அடிப்படைவாதிகளின் புகலிடமாக மாறிவிட்டதாக… அண்ணாமலை குற்றச்சாட்டு | AthibAn Tv

Facebook Comments Box