டிராமா மாடல் திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக ASER என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, பள்ளிகளில் கல்வித் தரம் குறித்த ASER அறிக்கை அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு பல பிரிவுகளில் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கியிருப்பதை ASER அறிக்கை வெளிப்படுத்துவதாகக் கூறிய அண்ணாமலை, டிராமா மாடல் திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளி வருவதாக விமர்சித்துள்ளார்.

ASER அறிக்கை தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறித்து திமுக அரசு கூறி வருவதற்கு முரணாக உள்ளது என்று கூறிய அண்ணாமலை, கடந்த 4 ஆண்டுகளாக விளம்பரத்தில் மட்டுமே டிராமா மாடல் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

Facebook Comments Box