கன்யாகுமரி மாவட்டத்தில் பட்டப்பகலில் வீடு உடைக்கப்பட்டு 20 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நித்திரவிளை அருகே உள்ள கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த பிரதீப், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தனது மனைவி ஹிமி மற்றும் 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், காலை 8 மணியளவில் வீட்டைப் பூட்டிவிட்டு ஹிமி தனது குழந்தைகளுடன் அருகிலுள்ள தேவாலயத்திற்குச் சென்றார்.
பின்னர், வீடு திரும்பியபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரது புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Facebook Comments Box