தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றார்.
சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை தினமும் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ஆளும் கட்சியின் உதவியுடன் தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை பெருகி வருவதாகவும், ஊழலை மறைப்பதற்காக மத்திய அரசு மீது பழி சுமத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
தாத்தா வயதுடைய ஒருவரை அப்பா என்று அழைத்தால் மகிழ்ச்சி என்று தினகரன் கூறினார்.
Facebook Comments Box